அதிமுகவின் சின்னத்தை யாராலும் முடக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவின் சின்னத்தை முடக்க யாராலும் முடியாது என்றும்,சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் சின்னத்தை முடக்க யாராலும் முடியாது என்றும், சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மந்தைவெளியில் அம்மா மினி கிளினிக்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடக்கி வைத்தார். அதன்பின் பேட்டியளித்த அவரிடம், இரட்டை இலைச் சின்னத்தை முடக்க முயற்சிகள் நடக்கிறதா எனச் செய்தியாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அவர், அதிமுகவை முடக்க எந்தக் கொம்பனாலும் முடியாது எனத் தெரிவித்தார்.
Comments