பிரிட்டனில் இருந்து ஒடிசாவுக்கு வந்த 27 பேர் எங்கே? தெளிவற்ற முகவரியைக் கொடுத்துள்ளதால் கண்டுபிடிக்க முடியவில்லை - ஒடிசா நலவாழ்வுத்துறை இயக்குநர்

0 1464

பிரிட்டனில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு வந்தோரில் 27 பேர் எங்கிருக்கின்றனர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என மாநில நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

நவம்பர் 30 முதல் டிசம்பர் 21 வரை பிரிட்டனில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு 181 பேர் வந்துள்ளனர். இவர்களில் 92 பேர் செல்பேசி எண்களை மட்டுமோ, தெளிவற்ற முகவரிகளையோ கொடுத்துள்ளனர்.

கடும் முயற்சிக்குப் பின் அவர்களில் 65 பேரைக் கண்டறிந்துள்ளதாகவும், இன்னும் 27 பேரைக் கண்டறிய முடியவில்லை. பிரிட்டனில் இருந்து வந்த  மூவருக்கு கொரோனா தொற்றுள்ளதாகவும், அவர்களின் இரத்த மாதிரி புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments