முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு... சிறப்பு நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் ஆஜர்

0 11756
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைக்காக  சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  நேரில் ஆஜரானார்.  

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட மு.க. ஸ்டாலின், தமிழக அரசை விமர்சித்து உரையாற்றினார்.

இதேபோல் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து டிவிட்டரில் சில கருத்துக்களை அவர் பதிவிட்டிருந்தார். இதேபோல் முதலமைச்சரை விமர்சித்து பேசியது குறித்த செய்தி முரசொலி நாளிதழில் வெளியானது.

இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் 6 அவதூறு வழக்குகள் சென்னை பாரிமுனையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்ததால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை மு.க.ஸ்டாலினின் வழக்கறிஞரிடம் அளித்தார். பின்னர் வழக்குகளை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், வழக்கு ஜனவரி முதல் வாரத்தில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் ஸ்டாலின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி மாதம் 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments