வெளிநாட்டில் வசிப்பவரின் நிலத்தை முறைகேடாக விற்க முயற்சி செய்த இருவர் கைது

0 1000

வெளிநாட்டில் உள்ளவரின் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற இருவரை சென்னை அடையாறு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் என்பவருடைய 4 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்து 880 சதுர அடி நிலம் அடையாறில் உள்ளது. அதனை சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் பராமரித்து வருகிறார்.

சாலிகிராமத்தைச் சேர்ந்த நேசன் டிக்சன் கிறிஸ்டோபர் என்பவர் அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பவர் ஆப் அட்டர்னி பெற்று சிவசங்கரன் என்பவருக்கு விற்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து  சுவாமிநாதன் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், நேசன் டிக்சன் கிறிஸ்டோபரையும் சிவசங்கரனையும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments