தேவைப்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் - பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

0 4656
தேவைப்பட்டால் எல்லை தாண்டி சென்று பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழிக்கும் என்று பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேவைப்பட்டால் எல்லை தாண்டி சென்று  பயங்கரவாத முகாம்களை  இந்திய ராணுவம் தாக்கி அழிக்கும் என்று பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டியளித்தார். அதில் அவர், பாகிஸ்தான் தோன்றியது முதலே, எல்லையில் தீங்கை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

இந்திய ராணுவ வீரர்கள் நமது நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகளை மட்டும் அழிப்பதோடு அல்லாமல், தேவைப்பட்டால் எல்லைத் தாண்டி சென்று பயங்கரவாத முகாம்களை தாக்கி அழிப்பார்கள் என்று கூறிய அவர், அதற்கான திறன் இந்தியாவிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சுயமரியாதைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலையும் இந்தியா சகித்துக் கொண்டிருக்காது என்றும், மென்மையாக நடந்து கொள்வதால் நாட்டின் மீது (pride) தாக்குதல் நடத்துகையில் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருப்போம் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது என ராஜ்நாத்சிங் எச்சரித்தார். இந்தியா தனது கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எச்செயலிலும் சமரசம் செய்து கொள்ளாது எனவும் அவர் கூறினார்.

எல்லையில் சீனா பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும், இந்தியாவும் அதுபோல பணிகளை செய்து வருவதாகவும் கூறிய ராஜ்நாத்சிங், இதை அடுத்த நாடு மீது தாக்குதல் நடத்துவதற்காக மேற்கொள்ளவில்லை, மாறாக இந்திய மக்களுக்காகவே செய்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்தியாவில் புதிய வகை கொரோனா பாதித்த 20 பேரில், 8 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் டெல்லிக்கு அடுத்து அதிகபட்சமாக பெங்களூரில் 7 பேருக்கு அக்கொரோனா உறுதியாகியிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் மட்டும் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு 30 ஆயிரம் பேர் வந்திருப்பதாகவும், அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments