இங்கிலாந்தில் இருந்து வந்த மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி

0 4138
இங்கிலாந்தில் இருந்து வந்த மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி

இந்தியாவில் மேலும் 14 பேர் புதிய வகை வீரியமிக்க கொரோனா பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உருமாறிய கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

சீனாவிலிருந்து தோன்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இங்கிலாந்தில் மரபணு ரீதியில் கொரோனா உருமாற்றம் பெற்று புதிதாக பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை முன்னெச்சரிக்கையாக பல்வேறு நாடுகளும் ரத்து செய்துள்ளன.

இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பியோரை தேடி கண்டுபிடித்து பரிசோதனைக்கு பல்வேறு நாடுகளும் உட்படுத்தி வருகின்றன. இதுபோல் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியோரை கண்டுபிடித்து அவர்களுக்கும், அவர்களோடு தொடர்பிலிருந்தோருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 6 பேருக்கு மரபணு மாற்ற புதிய வகை வீரியமிக்க கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் 14 பேருக்கு தற்போது பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய வகை வீரியமிக்க கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments