சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு

0 741
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

நாளை அதிகாலை முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் ஜனவரி 20ஆம் தேதி கோயில் நடை சாத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மகர விளக்கு காலத்தில் அனைத்து நாட்களிலும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள், கண்டிப்பாக கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments