அழுகிய எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்குவதாக மம்தா பானர்ஜி விமர்சனம்

0 2192
அழுகிய எம்.எல்.ஏக்கள் விற்பனைக்குத் தயாராக இருப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கட்சி மாறிய எம்.எல்.ஏக்களை விமர்சித்தார்.

அழுகிய எம்.எல்.ஏக்கள் விற்பனைக்குத் தயாராக இருப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கட்சி மாறிய எம்.எல்.ஏக்களை விமர்சித்தார்.

திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகி மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி மமதாவின் உறவினர் ஆவார்.

திறந்தவெளி ஜீப்பில் பிரச்சாரம் செய்த அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் பிரச்சாரத்திற்கு எதிராக தமது பலத்தைக் காட்ட நினைத்த மமதா பானர்ஜி நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது கட்சி மாறிய சுவேந்து அதிகாரியை கடுமையாக விமர்சித்த மமதா பானர்ஜி, பணத்தை வீசியெறிவதால் சிலர் அழுகிய எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதால் திரிணாமூல் காங்கிரசையே விலைக்கு வாங்கி விட முடியாது என்று சாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments