ரஜினிகாந்துக்காக ஜோதிட தொழிலை கைவிடும் ஷெல்வி..! கணிப்பு பாவங்கள்

0 299533
ரஜினிகாந்துக்காக ஜோதிட தொழிலை கைவிடும் ஷெல்வி..! கணிப்பு பாவங்கள்

தமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி என்பவர், டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது கணிப்பு பொய்யாகி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

கொரோனாவால் மக்களை முடக்கி போட்டிருந்த 2020 ஆம் ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக இருக்கும் என்று முன் கூட்டியே கணித்த யதார்த்த ஜோதிடர் ஷெல்வி இவர்தான்..!

இதே போலத்தான், நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், அப்படி அவர் தொடங்கவில்லை என்றால் தான் பார்த்துவரும் ஜோதிடத் தொழிலையே விட்டு விடுவதாகவும் யதார்த்தமாக சவால் விட்டிருந்தார் ஜோதிடர் ஷெல்வி.

இந்த நிலையில், யதார்த்த ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பை, ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற அறிக்கை பதம் பார்த்துவிட்டது. தற்போது ஷெல்வி ஜோதிட தொழிலை கைவிடுவாரா ? அல்லது தனது கணிப்பு தவறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்வாரா? என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments