லடாக் எல்லையில் சீனப்படைகள் குவிப்பு - தயார் நிலையில் இந்திய விமானப்படை

0 19235
கிழக்கு லடாக் எல்லையில் அதிகளவில் ராடார்கள், ஏவுகணைகள் போன்றவற்றை சீனா குவித்துவரும் நிலையில், எத்தகைய சூழலையும் சந்திக்கத் தயார் என்று விமானப் படைத் தளபதி பஹதூரியா தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக் எல்லையில் அதிகளவில் ராடார்கள், ஏவுகணைகள் போன்றவற்றை சீனா குவித்துவரும் நிலையில், எத்தகைய சூழலையும் சந்திக்கத் தயார் என்று விமானப் படைத் தளபதி பஹதூரியா தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான மோதல் சீனாவுக்கு நல்லதல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்து வருவதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்தியா-சீனா ராணுவ உயரதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையினால் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில் தேசிய பாதுகாப்பு சவால்களும் இந்தியாவின் வான் பலமும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் காணொலி வாயிலாக உரை நிகழ்த்திய இந்திய விமானப்படையின் தளபதி பஹதூரியா, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகில் சீனா பெரும் அளவு படைகளைக் குவித்திருப்பதாக தெரிவித்தார்.

அந்தப் படைகளுக்குத் துணையாக அதிகளவில் ராடார் கருவிகளும் தரைவிட்டு தரை பாயும் ஏவுகணைகளையும் அதிகளவில் குவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். J 20, J10 ரஷ்யாவின் SU 30 உள்ளிட்ட போர் விமானங்களையும் சீனா இந்திய எல்லையை ஒட்டிய திபெத் படைத்தளத்தில் குவித்துள்ளது.

சீனாவின் ஆக்ரமிப்பு, படைக்குவிப்பு காரணத்தால் எத்தகைய அசாதாரண சூழல் ஏற்பட்டாலும் அந்த சவாலை சந்திக்க, இந்திய விமானப்படை தயாராக இருப்பதாகவும் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments