முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு - குற்றவாளியை கைது செய்ய மூன்று வார அவகாசம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போடிய மக்களுக்கு இந்தியா உதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போடியா மக்களுக்கு உதவும் விதத்தில் 15 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்திய கடற்படையின் கில்டன் என்ற கப்பல் நிவாரணப் பொருட்களுடன் கம்போடியாவின் சிகனோக்வில்லி துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
சாகர் மிசன் 3 திட்டத்தின் கீழ் மனிதநேய அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதே போன்று கடந்த வாரம் வியட்நாமுக்கும் 15 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி இருந்தது.
Comments