எல்லையில் ராணுவ தளவாடங்களை குவித்து வைத்துள்ளது சீனா-இந்திய விமானப்படை தளபதி பதாரியா தகவல்

0 1815
எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் சீனா ராணுவம் தளவாடங்களை குவித்து வைத்துள்ளதாக, இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.

எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் சீனா ராணுவம் தளவாடங்களை குவித்து வைத்துள்ளதாக, இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், எல்லையில் சீனா, ரேடார்கள், நிலத்தில் இருந்து வான் மற்றும் நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்ல ஏவுகணைகள் உள்ளிட்ட அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டார். இதை கருத்தில் கொண்டே தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இந்திய விமானப்படை தரப்பில் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

இந்தியா-சீனா இடையிலான எந்தவொரு தீவிரமான மோதலும் உலக அளவில் சீனாவிற்கு நல்லதல்ல என்றும் தளபதி பதாரியா எச்சரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments