தமிழ்நாட்டில் மீண்டும் 1000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

0 5385
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதன் எதிரொலியாக, பல வாரங்களுக்குப் பிறகு, ஒருநாள் பாதிப்பு, மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதன் எதிரொலியாக, பல வாரங்களுக்குப் பிறகு, ஒருநாள் பாதிப்பு, மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

இன்று 957 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆயிரத்து 65 பேர், பாதிப்பிலிருந்து நலமடைந்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளதாக, கூறப்பட்டுள்ளது. சென்னையில் 286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் புதிதாக, தொற்று பாதிப்பு, பதிவாகவில்லை. தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில், தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments