அதிகாரமாற்றத்திற்கு டிரம்ப் தரப்பினர் இடையூறு செய்கிறார்கள்-முக்கிய தகவல்களை மறைப்பதாகவும் ஜோ பைடன் குற்றச்சாட்டு

அதிகார மாற்றத்திற்கு டிரம்ப் தரப்பினர் இடையூறு செய்வதாக ஜோபைடன் குற்றம் சாட்டி உள்ளார்.
அதிகார மாற்றத்திற்கு டிரம்ப் தரப்பினர் இடையூறு செய்வதாக ஜோபைடன் குற்றம் சாட்டி உள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில துறைகளில் அதிகார மாற்றம் எளிதாக நிகழ்கிறது என்றார். ஆனால் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் டிரம்ப் தரப்பினர் அதிகார மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றார்.
தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் முழு தகவலையும் அளிக்க டிரம்ப் தரப்பு மறுப்பதாக அவர் குறிப்பிட்டார். வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு துறையை முற்றிலுமாக கட்டமைக்க வேண்டியது உள்ளது என்றும், இது சவாலான காரியம் என்றும் அவர் கூறினார். மேலும் சீனாவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய நாடுகளை கொண்ட கூட்டணி உருவாக்கப்படும் என்றும் பைடன் தெரிவித்தார்.
Comments