ஜன 27-ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆவார் எனத்தகவல்

0 38499
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி விடுதலையாவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி விடுதலையாவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், சசிகலாஏற்கனவே 129 நாட்கள் விசாரணையின் போது சிறையில் இருந்த காலத்தை தண்டனையில் கழித்துக்கொள்ள வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது என்றார்.

ஆனால் சசிகலா ஜனவரி 27-ந் தேதி விடுதலை ஆவார் என்று சிறை நிர்வாகம் கூறியதாக குறிப்பிட்டார்.  ஆனால் முன் கூட்டியே சசிகலா விடுதலையாவதற்கான சலுகையை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments