தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர்...

0 2285
தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர்...

2 ஆயிரத்து 500 ரூபாய் பொங்கல் பரிசுத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான செய்தியை பரப்பி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

வெற்றிநடைபோடும் தமிழகம் என்னும் தலைப்பில் நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஆட்டையாம்பட்டி பிரிவில் பேசிய அவர், பொங்கல் பரிசு 2500 ரூபாய்க்கான டோக்கனை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று வழங்குவதாக மு.க.ஸ்டாலின் கூறுவது பொய் என்றார்.

பின்னர் நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபட்டார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டு, பரிவட்டம் கட்டப்பட்டது. வழிபாட்டுக்குப் பின்னர் கோவில் வளாகத்தில் சாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.

ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பழனிசாமி, திமுகவின் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றார்.

திருச்செங்கோடு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேருந்து நிலையம் அருகே வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.திருச்செங்கோடு நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அவர் உறுதி அளித்தார். 

பள்ளிப்பாளையம், கபிலர்மலை உள்ளிட்ட இடங்களிலும் முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார்.

நாமக்கல்லை அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் பாரம்பரிய உருமி மேளம் அடித்து முதலமைச்சரை வரவேற்றனர். அங்கு மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி,
உருமி ஆட்டத்தை கண்டு ரசித்தார்.

ராசிபுரம் பிரதான சாலையில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், விவசாயி என்றால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது என்றும், விவசாயிகளை ரவுடிகளுடன் ஒப்பிட்டு அவர் பேசியதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவின் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றார். கொஞ்சம் ஏமாந்தால் திமுகவினர் பேசிப் பேசியே மனதையே திருடி விடுவார்கள் என்றும் முதலமைச்சர் விமர்சித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments