ஈரானில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் பணி தொடங்கியது..!

0 877
ஈரானில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் பணி தொடங்கியது..!

ரானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் பணி தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் திகழ்கிறது. அந்நாட்டை சேர்ந்த சிபா பார்மட் எனும் மருந்து நிறுவனம், கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

ஈரானில் உருவாக்கப்பட்ட முதல் மருந்தான அதை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் பணியை இன்று ஈரான் தொடங்கியது. மக்களிடையே மருந்து மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் தடுப்பூசி மருந்தை அந்நிறுவன தலைவரின் மகளுக்கும், நிறுவன அதிகாரிகளும் முதலில் செலுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments