வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதியானால் அது உருமாற்ற கொரோனா பாதிப்பா என ஆய்வு செய்யப்படும்- மத்திய அரசு

0 986
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதியானால் அது உருமாற்ற கொரோனா பாதிப்பா என ஆய்வு செய்யப்படும்- மத்திய அரசு

டந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த யாருக்கேனும் கொரோனா உறுதியானால், அது உருமாற்ற கொரோனா பாதிப்பா என மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால், அது உருமாறிய கொரோனா பாதிப்பா என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஒருவருக்கும், நாடு முழுவதும் மொத்தம் 6 பேருக்கும் இதுவரை கொரோனா உருமாற்றப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து வேறு நாடுகளுக்கும் இந்த கொரோனா பரவியுள்ளதால், எந்த வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அது உருமாறிய கொரோனா பாதிப்பா என ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments