2020 ஆம் ஆண்டை 10 ஆண்டுகளுக்கு முன்பே மிக தவறாக கணித்த மாணவன்... இணையத்தில் வைரல்

0 6597

2020ம் ஆண்டு குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவன் ஒருவனின் தவறான கணிப்பு தற்போது சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

2020 ஆண்டு அனைவருக்கும் அதிர்ச்சிகரமான, ஆச்சரியமான ஆண்டாக அமைந்தது. ஆஸ்திரேலியாவில் பரவிய காட்டு தீ முதல் உலக மக்கள் அனைவரையும் கவர்ந்த அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனாவின் இறப்பு வரை உலகம் முழுவதும் பல கொடூர சம்பவங்கள் இந்த ஆண்டில் நிகழ்ந்தன. அதிலும் கடந்தாண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா, உலகம் முழுவதும் உள்ள லட்சக்காணக்கான மக்களின் உயிரை வாங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கையையும் அடியோடு பாதிக்கப்பட்டு, அனைவரையும் வீட்டு சிறையில் இருக்கும் நிலை உருவானது. 

ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் போதும் அந்த ஆண்டினைப் பற்றிய கணிப்புகளை பல்வேறு தரப்பட்ட மக்களும் சொல்வது வழக்கம். அதிலும் நம்மூர் ஜோதிடர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கூறியஅனைத்து கணிப்புகளையும் கொரோனா எனும் அரக்கன் வந்து சுக்குநூறாய் அடித்து நொறுக்கி தவிடு பொடியாக்கினான். 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சொல்லப்பட்ட ஆண்டு பலன்கள் அனைத்தும் ட்ரோல் செய்யப்பட்டு வைரலாகியது.

அதே போல 2020ம் ஆண்டு நிறைவடையும் தருவாயில் பள்ளி மாணவன் ஒருவன் 10 ஆண்டுகளுக்கு முன்பு தவறாக கணித்திருந்தது தற்போது  சமூகவலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கெவின் சிங் என்ற அந்த மாணவன், 2020ம் ஆண்டில் அனைவரும் அமைதியாக வாழ்வார்கள் என்றும், அந்த ஆண்டில் தோன்றும் நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தி விடலாம் என்று  கணித்திருந்தான். 

கெவின்சிங் கணிப்பு குறித்த வாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, வரும் 2021 ஆம் ஆண்டு  நம்பிக்கையுடன் மக்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். வருகிற ஆண்டாவது மாணவன் கெவின் சிங் கணித்தப்படி அனைவருக்கும் அமைதியான, மகிழ்ச்சியான ஆண்டாக அமைய வேண்டும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments