புதிய கொரோனா பரவும் சூழலில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கொரோனா பரவும் சூழலில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கொரோனா பரவும் சூழலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனுவில், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்த அதே தவறை மத்திய அரசு தற்போதும் செய்வதாக புகார் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து, விமானம், கப்பல் மூலம் இந்தியா வரும் பயணிகளை தனிமைப்படுத்தி, ஐந்தாவது நாள் கொரோனா பரிசோதனை செய்து, அறிகுறி இல்லாவிட்டால் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments