ரஜினி தனது ஆதரவை அதிமுகவிற்கு கொடுப்பார் - அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும், அவருடைய ஆதரவை அதிமுகவிற்கு கொடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும், அவருடைய ஆதரவை அதிமுகவிற்கு கொடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினியிடம் ஆதரவு கேட்பது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றார்.
முன்னதாக சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் நடமாடும் டீக்கடையை அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி சம்பத் தொடங்கி வைத்தனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த அனைத்து சிறப்பம்சங்களுடன் பெண்களால் இயக்கப்படும் டீ கடையாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Comments