நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசனத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா கோலாகலம்..!

0 1243
நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசனத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா கோலாகலம்..!

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கி, எட்டு நாள் நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்ட தரிசனத்திற்கு ஆன்லைன் அனுமதிச் சீட்டு அவசியம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து நேற்று நள்ளிரவு வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக இந்த முறையை ரத்து செய்து அனைத்து பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவித்ததை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

ஆலயத்தில் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு, மேள வாத்தியங்கள் முழங்க தேர்கள் புறப்பட்டன. நடராஜர் சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தனித்தனி தேர்களில் எழுந்தருளச் செய்தனர்.

முதலில் விநாயகர், முருகர் தேர்கள் புறப்பட்டன. பிறகு நடராஜர் சிவகாமசுந்தரி சண்டிகேஸ்வரர் என ஒன்றன் பின் ஒன்றாக தேர்கள் நான்கு வீதிகளில் வலம் வந்தன. திரளான பக்தர்கள் சிவ சிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அசைந்தாடும் காட்சி பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தேருக்கு முன்பாக இசைக் கருவிகள் இசைத்தபடி சிவபக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல பெண்கள் வீதி எங்கும் கோலம் இட்டவாறே சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments