மோடியா? இந்த லேடியா என கேட்டவர் ஜெயலலிதா... மோடிதான் எங்க டாடி என்று சொல்லும் நிலையில் தற்போது அதிமுக - உதயநிதி ஸ்டாலின்

மோடியா? லேடியா? என்று ஜெயலலிதா துணிச்சலாக கேட்ட நிலையில், மோடிதான் எங்க டாடி என்று சொல்லும் நிலையில் அதிமுகவினர் இருப்பதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமரிசித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாஜக சொல்லும் நிலையிலே அதிமுக உள்ளதாக கூறினார்.
ஸ்ரீரங்கத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டதாக கூறினார்
Comments