சென்னையில் காவல்நிலைய ஆய்வாளரை குற்றம்சாட்டி பெண் காவலர் ஆடியோ பதிவு

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலைய பெண் காவலர் ஒருவர், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கொடுக்கும் பணி சுமையை தாங்க முடியவில்லை என்றும், ஆதலால் தற்கொலை செய்ய போவதாக ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
பெண் காவலரான உஷா என்பவர், அக்காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பாலன் மீது குற்றம்சாட்டி ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள தன்னை கடுமையான வேலைகளை மேற்கொள்ள சொல்லி தொந்தரவு செய்வதாகவும், பணிச் சுமையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் உஷா குற்றம்சாட்டியுள்ளார்.
பெண் காவலர் உஷாவின் ஆடியோ பதிவு குறித்து, காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments