2021 தேர்தலில் திமுக வெற்றி பெறும்... மு.க. ஸ்டாலின் சூளுரை

2021 தேர்தலில் திமுக வெற்றி பெறும்... மு.க. ஸ்டாலின் சூளுரை
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும் என மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தில், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டுவருவது தான் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் நிதியை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
Comments