கேரளாவில் தற்கொலைக்கு முயன்ற தம்பதி: தடுக்க முயன்ற போது தீப்பற்றி உயிரிழந்த விபரீதம்

கேரளாவில் தற்கொலைக்கு முயன்றவர்களிடம், லைட்டரை போலீசார் பறிக்க முயன்ற போது, எதிர்பாரதவிதமாக தீப்பற்றி கணவன், மனைவி உயிரிழந்தது தொடர்பான பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சொத்து தொடர்பான வழக்கில்,நெல்லிமூடு பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரது வீட்டை அதிகாரிகள் ஜப்தி செய்ய முயன்றனர். அப்போது தனக்கு மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்குமாறு ராஜன் கேட்க, அதற்கு அதிகாரிகள் மறுப்புத்தெரிவித்துள்ளனர்.
இதனால் மனைவி மற்றும் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, லைட்டரை பற்றவைத்தவாறு அவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அந்த லைட்டரை போலீசார் தட்டிவிட முயன்ற போது எதிர்பாராதவிதமாக அந்த தம்பதியின் உடலில் தீ மளமளவென பற்றியது
Comments