கம்பவுண்டர் ஊசி போட்டதால் நோயாளி மரணம்! - உடலை வாசலில் போட்டுவிட்டு சென்ற ஊழியர்கள்!

0 5228

புதுச்சேரியில், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவர் இறந்த நிலையில், உடலை வாசலில் வைத்து விட்டு, மருத்துவமனையை ஊழியர்கள் பூட்டிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் தனியார் ((சிவா சக்தி))) கிளினிக் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, 54 வயதான கூலித்தொழிலாளி ஆறுமுகம் என்பவர் திடீர் மூச்சுத் திணறலுடன் மருத்துவம் பார்க்க வந்துள்ளார். அங்கு மருத்துவர் இல்லாததால், மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவருக்கு போன் செய்து நோயாளி குறித்து விவரம் கூறியுள்ளனர். பின்னர், மருத்துவர் பரிந்துரைத்த   ஊசியை போட்டுள்ளனர். ஊசி போட்டதும்,  மயங்கி விழுந்த சிறிது நேரத்தில் ஆறுமுகம் இறந்துபோனார்

இதனால் அதிர்ச்சியடைந்த  ஆறுமுகத்தின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் சண்டையில் ஈடுபட்டனர். பிறகு, கிளினிக்கை மூடிய ஊழியர்கள் இறந்தவர் உடலை வாசலிலே போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அதனால், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகத் தனியார் கிளினிக் வாசலிலேயே உடல் கிடந்தது. 

ஆறுமுகத்தின் உறவினர்கள் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார்  மருத்துவர் அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் உடலைக் கைப்பற்றி பிம்ஸ் மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்கூறு பரிசோதனை முடிவு வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments