கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மகள்களை சேர்க்க லஞ்சம் கொடுத்த வழக்கு... 2 மாதம் தண்டனை முடிந்து சிறையிலிருந்து நடிகை லாப்லின் விடுதலை

0 1049
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மகள்களை சேர்க்க லஞ்சம் கொடுத்த வழக்கு... 2 மாதம் தண்டனை முடிந்து சிறையிலிருந்து நடிகை லாப்லின் விடுதலை

போலி சான்றிதழ் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் மகள்களை சேர்க்க லஞ்சம் கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 2 மாத சிறை தண்டனை முடிந்ததையடுத்து பிரபல ஹாலிவுட் நடிகை லோரி லாப்லின் விடுதலை செய்யப்பட்டார்.

அமிடிவில்லி -3டி, கிரால்ஸ்பேஸ், ஓல்ட் டாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும், புல் ஹவுஸ் தொடரிலும் நடித்துள்ள லோரி லாப்லினும், அவருடைய கணவர் மொசிமோ கியானுலியும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மகள்களை சேர்க்க 5 லட்சம் டாலர்களை லஞ்சமாக கொடுத்ததாக கைது செய்யப்பட்டனர்.

இதில் கியானுலிக்கு 5 மாதமும், லாப்லினுக்கு 2 மாதமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லாப்லின் விடுதலை ஆன நிலையில், கியானுலி ஏப்ரலில் விடுதலையாகவுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments