நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 2816
நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

2 ஆயிரத்து 500 ரூபாய் பொங்கல் பரிசுத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான செய்தியை பரப்பி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று வழங்குவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

வெற்றிநடைபோடும் தமிழகம் என்னும் தலைப்பில் தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். மாவட்ட எல்லையான ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் அதிமுகவினர் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அங்கு உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து நாமக்கல் சென்ற முதலமைச்சர் வழியில் திரண்டிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்..

பின்னர் நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபட்டார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டு, பரிவட்டம் கட்டப்பட்டது.

வழிபாட்டுக்குப் பின்னர் கோவில் வளாகத்தில் சாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.  முதலைப்பட்டி பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொண்டர் ஒருவர் வீட்டில் தேனீர் அருந்தினார்.

நாமக்கல்லை அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் பாரம்பரிய உருமி மேளம் அடித்து முதலமைச்சரை வரவேற்றனர். அங்கு மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி, உருமி ஆட்டத்தை கண்டு ரசித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments