காருக்குள் அமர்ந்து மது குடித்த 30 வயது இளைஞர் மரணம்.. கணவர் இறப்பை நம்ப முடியாமல் தவித்த மனைவி!

பரமக்குடியில் காருக்குள் அமர்ந்து மது குடித்த 30 வயது இளைஞர் திடீரென்று மரணமடைந்தார். கணவரின் இறப்பை நம்ப முடியாமல் தவித்த மனைவியை கண்டு அக்கம் பக்கத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் வைகை நகரில் மிதுன்குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரின், மனைவி சுகன்யா வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ரிஷிதா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை தன் வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த காரில் பூட்டிக் கொண்டு உள்ளேயிருந்து மிதுன் குமார் மது அருந்தியதாக தெரிகிறது. நீண்ட நேரமாக மிதுன் குமார் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து, அவரின் தாயார் லதா மகனை தேடி சென்றுள்ளார். அப்போது, காருக்குள் மிதுன் குமார் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கார் கண்ணாடியை உடைத்து கதவு திறக்கப்பட்டது. உடனடியாக . அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக கூறி விட்டனர். மிதுன்குமாரின் உடலை பார்த்து , கணவர் இறந்து விட்டார் என்பதை நம்ப முடியாமல் பித்து பிடித்தது போல இருந்த மனைவி சுகன்யாவை கண்டு அக்கம் பக்கத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர். காரில் உள்ள ஏ.சியில் இருந்து வாயு கசிந்ததால் மிதுன் இறந்து போனரா அல்லது மாரடைப்பு காரணமாக இறந்தாரா என்பது குறித்து உடற்கூறு ஆய்வுக்கு பிறகுதான் தெரிய வரும் என்று போலீஸார் கூறுகின்றனர்.
Comments