புதுச்சேரியில், இறந்தவர் உடலை கிளினிக் வாசலில் வைத்த ஊழியர்கள்... மரணம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை

0 881

புதுச்சேரியில், இறந்து போனவரின் உடலை வாசலில் வைத்து விட்டு, மருத்துவமனையைப் பூட்டிச் சென்ற ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

54 வயதான ஆறுமுகம் கடும் மூச்சுத் திணறலுடன் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு வந்துள்ளார். அப்போது மருத்துவர் இல்லாததால், அங்கு பணியிலிருந்த ஊழியர் மருத்துவரிடம் போனில் பேசி விட்டு நோயாளிக்கு ஊசி போட்டதாகவும், இதனால் ஆறுமுகம் மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆறுமுகத்தின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மருத்துவமனை ஊழியர்கள் உடலை வாசலில் வைத்து விட்டு, கிளினிக்கை பூட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. 2 மணி நேரமாக வாசலில் கிடத்தப்பட்டிருந்த உடலை மீட்ட போலீசார், மருத்துவர் அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments