3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: ராகுல்காந்தி வலியுறுத்தல்

விவசாயிகள் எதிர்க்கும் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக டிவிட்டரில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகள் தற்சார்பு அடையாமல் இந்தியா தற்சார்பு அடைய முடியாது என்று குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி,விவசாயிகளையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது பாட்டியைப் பார்க்க தாயார் சோனியாகாந்தியுடன் ராகுல் இத்தாலி சென்றுள்ள நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
Comments