உ.பி.யில் நடுச்சாலையில் துடிக்கத் துடிக்க இளைஞர் அடித்துக் கொலை

0 1953

உத்தரப்பிரதேசத்தில் நடுச்சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

காஸியாபாத் அருகே உள்ள லோனி என்ற இடத்தைச் சேர்ந்த அஜய் என்பவரின் சகோதரர் சஞ்சய் என்பவருக்கும் கோவிந்த் என்பவருக்கும் இடையே தகராறு இருந்தது.

இதுபற்றி காவல் நிலையத்தில் அஜய் புகார் கூறியதால் ஆத்திரமடைந்த கோவிந்த், தனது நண்பருடன் சேர்ந்து அவரை நடுச்சாலையில் கட்டையால் அடித்துக் கொன்றனர்.

இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்கள், படுகாயமடைந்த அஜய்யை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments