வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடரும் விவசாயிகள் போராட்டம்... நாளை பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு

0 682
வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடரும் விவசாயிகள் போராட்டம்... நாளை பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு விடுத்த அழைப்பை, விவசாயிகள் சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

டெல்லி அருகே 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் 34வது நாளாக நீடித்து வருகிறது. மத்திய அரசுடன் நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், நாளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதனை ஏற்றுக் கொண்டுள்ள விவசாயிகள், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் அம்சங்களை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments