மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கண்காணிக்க 40,000 போலீசார்... ட்ரோன்கள் மூலம் மக்களைக் கண்காணிக்க முடிவு

0 508

மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கண்காணிக்க 40 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க மும்பை போலீஸ் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர அரசு விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் புத்தாண்டை எளிய முறையில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு கடற்கரை, தோட்டங்கள், சாலைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments