தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

0 4236
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை கிடையாது என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு எனவும், கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் பொருத்தவரை கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் 70 வயது வரை நடித்துவிட்டு ஓய்வு பெறும் வயதில் அரசியலுக்கு வந்திருப்பதாகக் கூறிய முதலமைச்சர், கமல், நடிப்பில் வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம் என்றும் அரசியலில் அவர் பூஜ்யம்தான் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், திரையரங்குகளை முழுமையாகத் திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தன்னைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments