கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மேகவுடா தற்கொலை

0 4447

கர்நாடகா சட்ட மேலவையின் துணை சபாநாயகர் தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநில சட்ட மேலவையில் துணை சபாநாயகராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தர்மே கவுடா இருந்து வந்தார். நேற்று மாலை தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்ற அவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள், உதவியாளர்கள் அவரை தேடியுள்ளனர்.

இந்த நிலையில், சிக்மகளூரு அருகே கதூர் பகுதியில் தர்மே கவுடா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ள போலீசார், தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments