"வெற்றிநடைபோடும் தமிழகம்" என்ற பெயரில் பல்வேறு ஊர்களில் இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு முதலமைச்சர் தேர்தல் பிரசாரம்

"வெற்றிநடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று செல்லும் முதலமைச்சர் அங்கு வீடு வீடாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு, லாரி உரிமையாளர்கள், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் செல்லும் முதலமைச்சர், துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஊர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அதிமுக தவெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் பல்வேறு ஊர்களில் தேர்தல் பிரசாரம்
லைமை கழகம் அறிவித்துள்ளது.
Comments