4 கோடி முதல் 5 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயார்... அரசின் அனுமதிக்காக காத்திருப்பு - சீரம் நிறுவனம்

0 3711
4 கோடி முதல் 5 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயார்... அரசின் அனுமதிக்காக காத்திருப்பு - சீரம் நிறுவனம்

கொரோனா நோய்த் தடுப்புக்காக ஏற்கனவே 4 கோடி முதல் 5 கோடி டோஸ்கள் தடுப்பு மருந்து தயாரித்து வைத்துள்ளதாகவும், அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் சீரம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனவல்லா, மருந்து தயாரிப்பதற்கான தளவாடங்கள் பற்றாக்குறையால் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது 4 கோடி முதல் 5 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பு மருந்து இருப்பு வைத்துள்ளாக கூறிய அவர், வரும் மார்ச் மாதத்திற்குள் 10 கோடி டோஸ்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவசரகால பயன்பாட்டுக்கு அரசிடம் அங்கீகாரம் கேட்டுள்ளதாக கூறிய பூனவல்லா, அதற்காகக் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments