தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 7780

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் தென்கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழையும்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்று லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

30ஆம் தேதி அன்று கடலோர மாவட்டங்களில், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும், 31 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments