டிச.29 முதல் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் - முதலமைச்சர்

0 2408

மிழகம் முழுவதும் செவ்வாய்கிழமை முதல் அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், கூட்டணி அமைச்சரவை கிடையாது என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு என்றார்.

திமுக எம்எல்ஏ சுப்ரமணியன்  பொய்யான குற்றச்சாட்டை அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார். திமுக ஆட்சியில் போரூர் பாலம் கட்ட அவசர கோலத்தில் அடிக்கல் நாட்டியதாகவும், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதனை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments