லண்டனில் இருந்து திரும்பிய பயணிகளில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை

0 1762

ண்டனில் இருந்து திரும்பிய பயணிகளுடன் தொடர்பில் இருந்த மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுபற்றி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நவம்பர் 25 முதல் டிசம்பர் 21 ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பி 2300 பேரில் 1549 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதில் 1432 பேருக்கு தொற்று இல்லை என்பதும் 13 பேருக்கு தொற்று இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், 104 பேரின் ரத்தமாதிரி முடிவுகள் தெரியவரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து பயணிகளுடன் தொடர்பில் இருந்த 93 பேரை பரிசோதித்ததில், 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments