தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி

0 5262

மிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட டாஸ்மாக் பார்களை, செவ்வாய்கிழமை முதல் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற இடங்களில் 50 சதவிகித இருக்கை பயன்பாட்டுடன் பார்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பார்களுக்கு வருவோருக்கு வெப்ப பரிசோதனை கட்டாயம் என்றும், பார்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர்களை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பார்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments