2021- ஆம் ஆண்டில் இந்தியா வருகிறது டெஸ்லா நிறுவனம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

0 3510

லக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்பாட்டை துவங்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.

ஆரம்பத்தில் டெஸ்லா கார் விற்பனையும் அதன் பின்னர் உதிரிபாகங்கள், தயாரிப்பு பணிகள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெஸ்லாவின் மாடல் 3 கார் விற்பனை 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் தொடங்கும் என்று ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்த நிலையில், கட்கரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். டெஸ்லா நிறுவன செயல் அதிகாரி எலான் மஸ்க், தங்களது நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் இந்தியா வரும் என்று கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Hey Elon , just thought we'd put this out here. We wait and hang on to hope wrt "hopefully soon" for India Tesla entry. Would love to hear of any progress in this regard. pic.twitter.com/8FNvyqFhIX

October 2, 2020

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments