டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு தீவிர சிகிச்சை

0 1286

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சரான திரிவேந்திர சிங் ராவத்திற்கு கடந்த 18-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில், முதல்மந்திரி ராவத் நேற்று மாலை திடீரென டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments