ஊரடங்கு தளர்வுகளுடன் கூடிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு

0 4916

ஊரடங்கு தளர்வுகளுடன் கூடிய கொரோனா தடுப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவது போன்ற காரணங்களால், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கடைபிடிக்கும் நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments