இந்தியா வர சீன குடிமக்களுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை - இந்திய அரசு

சீன நாட்டினரை விமானங்களை அனுமதிக்க வேண்டாம் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பிற நாட்டு குடிமக்களை இந்தியாவுக்கு வர கூடாது என்று எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என்றார்.
சீனாவை சேர்ந்தவர்களை இந்தியாவுக்கு வரும் விமானங்களில் அனுமதிக்க வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது என்று அவர் கூறினார். இதுபோல எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்று அவர், இதுகுறித்து வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார்.
Comments