முழு வான்கோழி இறைச்சியை தின்றுவிட்டு நடக்க முடியாமல் படுத்து கிடக்கும் நாய்

கிறிஸ்துமஸ் டின்னருக்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த முழு வான்கோழி இறைச்சியை தின்றுவிட்டு நாய் ஒன்று நடக்க முடியாமல் படுத்து கிடக்கும் படம் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் டின்னருக்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த முழு வான்கோழி இறைச்சியை தின்றுவிட்டு நாய் ஒன்று நடக்க முடியாமல் படுத்து கிடக்கும் படம் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஸ்காட்லாந்தின் பிரஸ்ட்விக் பகுதியை சேர்ந்த டேவிட் பாரட் என்பவரின் வீட்டில் கிறிஸ்துமஸ் டின்னருக்காக முழு வான்கோழி சமைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதை வீட்டில் வளர்க்கப்படும் Chi Apso இனத்தை சேர்ந்த 5 வயதான பப்பா என்ற நாய், தின்றுவிட்டது. உருவத்தில் சிறிய நாயான பப்பா, வான்கோழி கறி முழுவதையும் தின்றதால் நடக்க முடியாமல் அப்படியே படுத்துவிட்டது. இக்காட்சியை படம்பிடித்து டேவிட் பாரட் வெளியிட அது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Comments