முறைகேடுகளில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் பெயர்களை கொண்ட கோப்பு உள்ளது - சஞ்சய் ராவத் எச்சரிக்கை

0 1694
முறைகேடுகளில் ஈடுபட்ட 121 பாஜகவினரின் பெயர்களை கொண்ட கோப்பு தன்னிடம் இருப்பதாகவும், அதை அமலாக்கத்துறையிடம் விரைவில் ஒப்படைக்க போவதாகவும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

முறைகேடுகளில் ஈடுபட்ட 121 பாஜகவினரின் பெயர்களை கொண்ட கோப்பு தன்னிடம் இருப்பதாகவும், அதை அமலாக்கத்துறையிடம் விரைவில் ஒப்படைக்க போவதாகவும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்- மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முறைகேடு (PMC bank fraud case) வழக்கில் ராவத்தின் மனைவி வர்சாவுக்கு,  அமலாக்கத்துறை  3ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. அதில், மும்பையில் உள்ள அலுவலகத்தில் 29ம் தேதி நேரில் ஆஜராகும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ராவத், அரசியல் யுத்தம் என்பது நேருக்கு நேரானதாக இருக்க வேண்டும் எனவும், இதற்கு சிவசேனா தனது பாணியில் பதிலடி கொடுக்கும் எனவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments