விமானங்களில் சீனர்களை ஏற்ற வேண்டாம் என அரசு அறிவுறுத்தியதாகத் தகவல் - விமான நிறுவனங்கள் விளக்கம்

சீனப் பயணிகளை விமானத்தில் ஏற்ற வேண்டாம் எனக் கூறி அரசிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சீனப் பயணிகளை விமானத்தில் ஏற்ற வேண்டாம் எனக் கூறி அரசிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா தொற்றால் முதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சீனா பின்னர் அதிலிருந்து மீண்டெழுந்தது. மீண்டும் அங்குக் கொரோனா பரவலைத் தடுக்க இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், வங்கதேசம், பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து பயணிகள் வரச் சீனா தடை விதித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக இந்திய விமானங்களில் சீனர்களை ஏற்ற வேண்டாம் என விமான நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அரசிடம் இருந்து அத்தகைய அறிவுறுத்தல் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்றும், சீனப் பயணிகள் உட்பட அனைவரையும் விமானத்தில் ஏற்றி வருவதாகவும் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Comments